ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
கோவை மாவட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில் தமிழர்களுக்கு உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் விதமாக 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும் ரூ ஆயிரம் ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு போன்ற பொருட்கள் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பணியை இன்று முதல்வர் முகஸ்டாலின் தொடங்கி வைகின்றார்.
இந்த பொங்கல் பரிசானது இன்று முதல் அடுத்த நான்கு தினங்களுக்கு அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் இந்த நான்கு நாட்களுக்குள் வாங்க முடியாதவர்கள் வரும் ஜனவரி 13 ஆம் தேதி அவரவர்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதனால் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார்.அதனால் இதனை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகை வைத்து ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை.அதனால் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் சேப்பாக்கம்,பெரம்பலூர் ஆகிய இரண்டு இடங்களில் துவங்கப்பட்டுள்ளது.தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அதனை செயல்படுத்த அரசானை வெளியிடப்பட்டுள்ளது.அதற்கான டெண்டர் விடப்பட்டு கைரேகை, கருவிழி மூலம் பொருட்கள் பெறுவது அனைத்தும் மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.