அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!
டிஎன்பிஎஸ்சி போன்ற அரசு தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரியலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தன்னார்வ கல்வி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பயிற்சித்துறை மூலம் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி,(TNUSRB) ஆர்ஆர்பி(RRB), எஸ்எஸ்சி(SSC), ஐபிபிஎஸ் (IBPS), டிஆர்பி (TRB) ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்த இலவச பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்க ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது என அரசு வேலைவாய்ப்பு துறை மற்றும் பயிற்சித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அரசின் போட்டி தேர்வுகளில் மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க விருப்பப்படுவோர் விண்ணப்பங்களை அனுப்பலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே 38 மாவட்டங்களில் இயங்கும் பயிற்சி மையங்களில் பயிற்சியாளராக பணிபுரிய ஆர்வம் உள்ள முன் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றோர் ஆகியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக http://bit.ly/facultyregistrationform என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.01.2023 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து விவரங்களுக்கு 044-22501006/22501002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி போட்டி தேர்வுகளில் பங்கேற்றுள்ள முன் அனுபவங்கள் மற்றும் கற்பிக்க விரும்பும் பாடங்கள் ஆகியவற்றையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.