இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 42 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசித்ததும் அதனை சபாநாயகர் மொழிபெயர்த்தார். ஆளுநர் உரையில் திராவிட மாடல் , மதநல்லிணக்கம், பெரியார் உள்ளிட்ட்ட சில வார்த்தைகள் இடம் பெறாதநிலையில், சபாநாயகரின் மொழிப்பெயர்ப்பில் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், அரசு தயாரித்த அறிக்கையை புறக்கணித்தாக முதல்வர் ஆளுநர் மீது குற்றம் சாட்டியதோடு அறிக்கையில் கொடுக்கபடாதவற்றை பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை சபாநாயகர் ஏற்றுகொண்ட நிலையில், ஆளுநர் அவையில் இருந்து வெளியெறினார்.
இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் ஆளுங்கட்சியின் இந்த செயலுக்கு கண்டம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, ஆளுநர் உரைதொடங்கியதும் திமுக அதன் கூட்டணிகட்சிகள் கூச்சலிட தொடங்கின. நிர்வாக திறன் இன்மை, லஞ்சம் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை மறைக்கவே இது போன்ற செயல்களில் ஆளும் கட்சி ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
அரசாங்கத்தின் திட்டம் மற்றும் கொள்கையினை ஆளுநர் வாசிப்பது மரபு ஆனால், இவர்களின் சித்தாந்ததின் ஊதுகோலாக ஆளுநர் இருக்க வேண்டும் என ஆளுங்கட்சி நினைப்பதாகவும் அதற்கான அரசியல் களமாக சட்டமன்றத்தை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டதை பொதுவெளியில் அரசு சொல்லாமல் ஏன் மறைக்கிறது என கேள்வி எழுப்பிய அவர் சட்டமன்றத்தில் ஆளுநரை அழைத்து அசிங்கப்படுத்தியது தான் ஜனநாயக மரபா எனவும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.