மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பினார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.இல்லையெனில் ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.
மேலும் இம்மாதம் மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.அதனால் கடந்த ஆறாம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
மேலும் இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில் கடந்த பேச்சு வார்த்தையில் எங்களுடைய கோரிக்கை தொடர்பாக மின்வாரியம் தரப்பில் இருந்து எந்த விதமான உறுதியும் கொடுக்கவில்லை.மேலும் ஊதிய உயர்வு தொடர்பாக ஒரு முன்மொழிவு கூட கொண்டுவரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மின்வாரியம் தான்.அரசு இல்லை.எங்களுடையே கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டிய தேவையில்லை எனவும் கூறப்பட்டது.நாளை மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த எழுமலை மற்றும் சரவணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கின் இறுதியில் பால் வினியோகம்,பள்ளி கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை கருத்தில்கொண்டு மின் விநியோகம் ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.