நிக்குறீயா இல்லை.. சுத்தியலுடன் களத்தில் இறங்கிய பெண்!! விடியா அரசால் வந்த சோதனை!!
திமுக ஆட்சி வந்ததை அடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும் தற்பொழுது எதுவும் உதவிகரமானதாக இல்லை.
இவர்கள் சலுகைகளை வழங்கிவிட்டு அதனை சொல்லிக்காட்டும் விதத்தில் இவர்களது அமைச்சர்களே பொது மேடையில் அவதூறாக பேசுகின்றனர்.
சமீபத்தில் கூட பொன்முடி அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் செல்கிறவர்கள் தானே என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி கட்டணமில்லா இலவச பயணம் என்று பெண்களுக்காக இத்திட்டம் வந்தவுடன் எந்த ஒரு நடத்துனர் மட்டும் ஓட்டுநரும் பெண் பயணியை மதிப்பதில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இது குறித்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே தான் உள்ளது.
முறைப்படி பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் இருந்தால் கூட பேருந்து நிற்காமல் செல்வது பயண சீட்டு கொடுக்க மறுப்பது என ஆரம்பித்து பல வகைகளில் பெண்கள் இந்த இலவச பயணத்தால் அவதிப்படுகின்றனர்.
அடி தூள் அப்படிபோடு!
வேலூர்மாவட்டம் ஒடுகத்தூரில் அரசுபேருந்து ஸ்டாப்பில் நிற்காததால் பேருந்தின் கண்ணாடியை உடைக்க பெண் கையில் #சுத்தியுடன் வந்ததால் பரபரப்பு.. விடியா அரசின் ஆட்சியில்-பெண்கள் கையில் ஆயுதம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்🤦 @AIADMKOfficial pic.twitter.com/R1y37riRSx— JSK@Jananii Sathishkumar (@JananiiSathish) January 8, 2023
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூரில் எப்பொழுதும் அரசு பேருந்து நிறுக்காமலே செல்கிறது.இதனால் பெண்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். இதனை எதிர்த்து கேட்கும் விதத்தில் அந்த ஊரை சேர்ந்த பெண்மணி கையில் சுத்தியல் எடுத்துக்கொண்டு அரசுப் பேருந்தை வழிமறைத்து நியாயம் கேட்கும் வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.
தற்பொழுது நடைபெற்று வரும் விடியா ஆட்சியில் இவ்வாறு பெண்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வந்து விட்டதா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.