ஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!!
சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றதில் ஆளுநர் தமிழக அரசு அளித்த குறிப்பில் உள்ளவற்றை கூறாததால் முதல்வர் நேரடியாக விமர்சனம் செய்ததை அடுத்து அவையை விட்டு வெளியேறினார். பின்பு முதல்வர் கூடுதலாக ஆளுநர் பேசிய எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதனையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார். அதில் தற்பொழுது ஆளுநர் அவையில் நடந்து கொண்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதாகவும் மேலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி நேற்று நடந்த சட்டப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் அவர்கள் சுமத்தி உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் கூறுகின்றனர். அது மட்டும் நன்றி கடந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் இன்று குறிப்பிட்டிருந்த நிலையில் நடப்ப ஆண்டில் தமிழக ஆளுநர் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எவ்வாறு ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றலாம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளுநர் மத்திய அரசுக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்பது எதார்த்தமான ஒன்று என கருதினாலும் இதனால் பல மாநிலங்களில் அரசியல் ஆட்சிகள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.