ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!
கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனராகம் புதிய உத்தரவு ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழகத்தில் பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்துள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணியாற்றும் கல்வித் தகுதிக்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு உரிய விதிப்படி ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
அதனை தொடரந்து பணியில் சேர்ந்த பிறகு உயர்கல்வி படிப்பதற்கு தாங்கள் பணிபுரியும் துறையின் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்று உயர் கல்வி படிப்பை முடிப்பவர்களுக்கு மட்டுமே ஊக்க ஊதியம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற அனுமதி வழங்க்கபடாது என கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் முன்னதாகவே அனுமதி பெற்றவர்களுக்கு மூத்த ஊதிய பரிந்துரையை மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். ஊக்க ஊதியம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் உள்ள நிலையில் தற்போது தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் முறைபடி ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்து அனுப்ப வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளனர்.