மதுகடை மூடப்படும் தேதி வெளியீடு! மீறினால் நடவடிக்கை அரசு வெளியிட்ட உத்தரவு!

0
156
Pub Closing Date Released! Action issued by the government if violated!
Pub Closing Date Released! Action issued by the government if violated!

மதுகடை மூடப்படும் தேதி வெளியீடு! மீறினால் நடவடிக்கை அரசு வெளியிட்ட உத்தரவு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடும்.மேலும் பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் இருந்து மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து இடங்ககளுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அப்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுகடைகள் அனைத்தும் மூடப்பட்டது.அப்போது மது பிரியர்கள் கிருமி நாசினியில் ஆல்கஹால் கலந்துள்ளது என அதனை அருந்தி உயிரை மாய்த்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் கடந்த தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு வரும் ஜனவரி மாதம்  15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும் ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளூவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனால் புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் புதுவை காவல்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள்,சாராயம் மற்றும் பார்கள் என அனைத்து மதுகடைகளும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த உத்தரவு தமிழகத்தில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு!
Next articleநாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!