பாமக- வை டார்கெட் வைத்த ஸ்டாலின்..மௌனம் காக்கும் அன்புமணி!! அடுத்த கூட்டணிக்கு ரெடி!!
அதிமுக தற்பொழுது இரண்டு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாமக இது குறித்து அதிருப்தியில் தான் உள்ளனர். அந்த வகையில் பாமக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் அன்புமணி ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பாமக ஆளும் கட்சியுடன் இணைய போகிறது என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வரும் நிலையில் தற்போது அதன் போக்கும் அவ்வாறு தான் காணப்படுகிறது. முன்பெல்லாம் திமுகவின் ஒவ்வொரு செயலுக்கும் அதில் உள்ள தவறை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பாமக தற்பொழுது அமைதி காத்து வருகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக தற்பொழுது பாமக சித்திரை முழு நிலவு திருவிழா மாமல்லபுரத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. இதற்கு தற்பொழுது வரை தமிழக அரசு ஒப்புதல் ஏதும் அளிக்காமல் உள்ள நிலையில், சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி இருந்த பொழுது சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்தது பற்றி வரிசையாக கூறி வரும் பொழுது இந்த வன்னியர் சங்கம் மாநாட்டின் போது தான் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பேசினார்.
ஏன் முதல்வர் வன்னியர் சங்கம் என குறிப்பிட்டு குறிப்பிட்ட சாதியினர் வன்மம் பிடித்தவர்கள் என்று சொல்வது போல் ஏன் பேச வேண்டும் என பாமக தலைவர்கள் பலர் பேசி வருகின்றனர்.ஆனால் இது குறித்து பாமக சார்பில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இதுவே பாமக திமுகவுடன் இணைப்பு என்ற ஒரு சிந்தனை இல்லாத இருந்தால் தற்சமயத்தில் சமூகத்தை குறிப்பிட்டு கூறியதற்கு பாமக சார்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கும்.
ஆனால் அனைத்தையும் கேட்டுக் கொண்டு பாமக பொறுமையாக இருப்பது திமுகவுடன் இணையத்தான் என்று தெரிகிறது. மறுபக்கம் இந்த சித்தரை முழுநிலா திருவிழாவிற்கு அனுமதி வழங்க மாட்டேன் வழங்கினால் இவ்வாறு ஒழுங்கு சீர்கேடு பிரச்சினை உண்டாகும் என முதல்வர் சொல்லாமல் சொல்லிவிட்டதாகவும் பலர் பேசி வருகின்றனர். இதில் அனுமதி வழங்குவது பொறுத்துதான் இவர்களது கூட்டணி கட்சி பற்றி தெரியவரும் என்று கூறுகின்றனர்.