துலாம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

0
119
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள். தியானம் யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதியாக செயல்படும்.

குடும்ப உறவுகளில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது.

 

வருமானம் சிறப்பாக உள்ளது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரலாம்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறிகிறது என்ற கவலை உடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

 

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.