அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்!
தற்போது நாகரீகமாக மாறி வருகின்றோம் என எண்ணி பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டதால் டீச்சர்,ஐயா என்பது சார் ,மேடம் என்று மாறியது.அதன் காரணமாக கேரள பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுக்காப்பு ஆணையம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் கேரள மாநில பள்ளிகளில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.அதனால் அந்த புகார் மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் மற்றும் உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் கூறுகையில்
பள்ளி ஆசிரியர்களை சார் என்றும் மேடம் என்று கூறுவதைவிட பாலின பாகுபாடு இல்லாமல் டீச்சர் என அழைப்பதுதான் முறையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவை அனுப்பவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை பற்றி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.