மக்களே எச்சரிக்கை! இந்த இரண்டு தேதிகளில் வங்கிகள் செயல்படாது! 

0
165
People beware! Banks will not function on these two dates!
People beware! Banks will not function on these two dates!

மக்களே எச்சரிக்கை! இந்த இரண்டு தேதிகளில் வங்கிகள் செயல்படாது!

இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை நாளில் தான் பிறந்தது.அதனை தொடர்ந்து அதற்கு பிறகு வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரும் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்துள்ளது.அதனை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி மாட்டு பொங்கல்,ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள்,ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என இந்த மாதங்களில் மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.

மும்பையில் நடைபெற்ற யுனைடெட் போரம் ஆப் பேங்க் யூனியன் கூட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூறுகையில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து தற்போது வரையிலும் எந்த ஒரு பதிலும் வரவில்லை.அதன் காரணமாக மீண்டும் நாங்கள் போராட்டம் நடத்தவுள்ளோம்.

அந்தவகையில் வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் ஐஏஎன்எஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒருவாரத்தில் ஐந்து நாட்கள் பணி, ஓய்வூதியம் புதுப்பித்தல், மிதமுள்ள பிரச்சனைகள்,தேசிய ஓய்வூதியம் முறையை ரத்து செய்தல்,ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்.மேலும் ஆட்சேர்ப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

Previous articleஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்!
Next articleமக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!