இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

0
245

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் போன்றவர்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தபடி பங்குபெற்றனர்.

இந்த சேவையானது இந்திய ரயில்வே சேவை நடத்தும் 8வது வந்தே பாரத் ரயில் சேவை என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ரயிலானது தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசங்களை இணைக்க சுமார் 700 கிலோ மீட்டர் இயக்கப்படும் முதல் ரயில் சேவை.

வந்தே பாரத் ரயில் சேவையானது ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மல், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!
Next articleஇன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!