உறுதி மொழி ஏற்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு! உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டியன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைதரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் பொங்கல் திருநாள் என்றாலே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி என்பது அனைத்து ஊர்களிலும் நடத்துவது வழக்கம் தான்.அதிலும் மதுரை அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூர் இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்பது மிக புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது.
அந்தவகையில் நேற்று முதல் களமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.அதில் மொத்தம் 320 மாடுபிடி பங்கேற்றனர்.1000 காளைகள் பங்கேற்றது.வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பீரோ,சைக்கிள்,கட்டில்,தங்க நாணயம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி ஏற்று தொடங்கப்பட்டுள்ளது.இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 355 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.750 க்கும் மேற்பட்ட காளைகளும் பங்குபெறும்.முதல் சுற்றில் கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றது.வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஏராளாமான பரிசுகள் வழங்கப்படவுள்ளது.