பொங்கல் அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்! இந்த ஆண்டு எனக்கு மிகவும் ஸ்பெஷல்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிக்கையில் ஒருவர் காஜல் அகர்வால்.இவர் பல ஹிட் படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.இவருக்கும் மும்பையில் தொழிலதிபர் கவுதம் கிச்லுவுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி காஜல் அர்வாலுக்கு ஆண்குழந்தை பிறந்தது.அதனையடுத்து அவருடைய கணவர் கவுதம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பெயர் நீல் கிச்சுலு என பெயரை அறிவித்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சி அனுபவங்களை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.அப்போது அவர் கூறுகையில் பொங்கல் பண்டிகையில் தயார் செய்யும் விதவிதமான உணவுகளை சாப்பிடுவதில் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த பொங்கல் பண்டிகையை எங்கள் பஞ்சாபிகள் லோஹ்ரி என கூறுவார்கள்.மேலும் இந்த பண்டிகையின் போது அம்மா வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.அதுமட்டுமின்றி எள்,கடலைப்பருப்பு,வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தி எண்ணற்ற உணவு பலகாரங்கள் எனது அம்மா தயார் செய்வார்கள்.அப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டே சாப்பிடுவோம் என கூறியுள்ளார்.
திருமணம் ஆன பிறகு அனைத்து பண்டிகைகளையும் பிறந்த வீடு மற்றும் மாமியார் வீடு என மாறி மாறி கொண்டாடுவது புது அனுபவத்தை கொடுத்துள்ளது.இந்த பொங்கல் என் மகனுடன் கொண்டாடும் முதல் பொங்கல் அதனால் எனக்கு இந்த பொங்கல் ஸ்பெஷல் என குறிப்பிட்டுள்ளார்.