பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல வெரைட்டிகளில் பறிமாறப்படுகிறது.
பிரியாணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வித்யாசமான சில போட்டிகளும் நடைபெற்றது. அதில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் பிரியாணி சாப்பிடும் வித்யாசமான போட்டி நடைபெற்றது.
போட்டியாளர்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடுக்கப்பட்டது. அதனை 5 நிமிடங்களுக்குள் யார் சாப்பிடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படும் என விழாக்குழு தெரிவித்தது. இந்த போட்டியில் பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வித்யாசமின்றி கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 5 நிமிடத்தில் சிக்கன் 65 சாப்பிடுதல், அரை கிலோ ஐஸ்கிரீம் சாப்பிடுதல் என பல போட்டிகளும் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிகளும் வழங்கப்பட்டது.