இனி ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரியில் பருவத் தேர்வு தான்! அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
அண்ணா பல்கலை கலக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைகழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கபடுகின்றது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பருவத் தேர்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அதற்கான அட்டவனையை பல்கலைகழகம் தற்போது அறிவித்துள்ளது.
அந்த வகையில் பருவத்தேர்வுகள் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கான கால அட்டவணையில் பிப்ரவரி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தரவுதள மேலாண்மை அமைப்பு,மின் வணிகம்,மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எப்போதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகள் மட்டும் தான் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படும்.ஆனால் புதிய நடைமுறையாக தற்போது பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடத்த அண்ணா பல்கலை கழகம் முடிவு செய்துள்ளது.மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,இதுபற்றிய விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.