மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் ஆற்றல் அதிகரிக்கும் உங்களுக்கு நாள்!!

0
315

மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் ஆற்றல் அதிகரிக்கும் உங்களுக்கு நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். ஜீவன் ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செய்யும் வேலைக்கு ஏற்றபடி பலன் கிடைக்கும். குடும்ப உறவு சுபிட்சமா இருக்கும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஏற்ப வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதி ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி அருமையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குறைகள் நீங்கி ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleமாதந்தோறும் ரூ.1 லட்சம் வரையிலான சம்பளத்தில் தமிழக அரசில் பணிபுரிய விருப்பமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here