இன்று முதல் அமலுக்கு வருகிறது பால், தயிர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லதரசிகள்..!

0
229

தனியார் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அரசின் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால், ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் ஒடு லிட்டருக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் இருந்து வருகிறது. இதனால், ஆவின் பால் விரைவாக விற்பனையாகி வருகிறது.மேலும், கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தனியார் பால் நிறுவனகள் பால் விலையை உயர்த்தினர். அதன்படி, பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய்யுள்ளனர்.இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக பால் நிறுவங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து, பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பால் கொள்முதல் விலை உயர்வாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, பால் விலை மூன்று வகைகளாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆகவும், இருமுறை சமன்படுத்த பால் ரூபாய் 64 ஆகவும்நிறை கொழுப்பு பால் ரூ.72 ஆகவும் உயர்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசெவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்!
Next articleகாவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!