குளிர்காலத்தில் சளி இருமலா? அப்போ இந்த சட்னி செய்து சாப்பிடுங்கள்..!

0
218

குளிர்காலத்தில் சளி இருமல் என அனைவருக்கும் ஏற்படும். இதற்கு வெற்றிலை சிறந்த தீர்வாகும். வெற்றிலையை சட்னியாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை :

வெற்றிலை – 5

மிளகு – 1/2 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

பூண்டு – 2 பல்

மிளகாய் – 4

பொரிகடலை – 3 ஸ்பூன்

தேங்காய் – ஒரு மூடி

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – 2ஸ்பூன்

புளி – 1 துண்டு

கடுகு – 1/2 ஸ்பூன்

உளுந்து – 1/4 ஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து அதில், மிளகு சீரகம் சேர்த்து வறுத்து கொள்ளவும். மிக்சியில் வறுத்த மிளகு சீரகம், தேங்காய், பொரி கடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில், கடுகு உளுந்து சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கொள்ளவும். இதனை சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Previous articleபொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்!
Next articleபிரதமர் நரேந்திர மோடிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரசிகன்!! வியப்பில் ஆழ்ந்த பாஜக பிரமுகர்கள்!