பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்!

0
447
Ponniyan Selvan Part 2 Trailer! Information that it will be released on this date!
Ponniyan Selvan Part 2 Trailer! Information that it will be released on this date!

பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்!

வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதினார். இந்த நாவலை பல ஆண்டுகால முயற்சிக்குப் பின்பு இயக்குனர் மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார்.இந்த படத்தில் கார்த்திக், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து அதிக வசூல் சாதனையை படைத்தது. மேலும் இதனைத் தொடர்ந்து பொன்னியன் செல்வன் பாகம் 2 வருகிற ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் குறித்து தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் இந்த படத்தின் டிரைலர் வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகாஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!
Next articleகுளிர்காலத்தில் சளி இருமலா? அப்போ இந்த சட்னி செய்து சாப்பிடுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here