மோடி அரசின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர கடைசி தேதி 31 மார்ச் 2023 ஆகும், ஏப்ரல் 1, 2023 முதல் மக்கள் இந்தத் திட்டத்தைப் பெற மாட்டார்கள். இருப்பினும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PMVVY திட்டத்தின் கீழ், இந்திய அரசு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய வசதிகளை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம், இதில் உங்கள் முதலீட்டிற்கு 7.4% வருடாந்திர வட்டி கிடைக்கும். நீங்கள் பத்து வருடத்தில் இந்த திட்டத்தில் பங்களித்தால், ஆண்டு முடிவில் உங்களுக்கு ரூ.1.1 லட்சத்தை வட்டியாகக் கிடைக்கும், இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,56,658 முதலீடு செய்யலாம்.
PMVVY திட்டத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்:
மாதம் ரூ.1,000
காலாண்டுக்கு ரூ.3,000
அரையாண்டுக்கு ரூ.6,000
ஆண்டுக்கு ரூ.12,000
PMVVY திட்டத்தில் கிடைக்கும் அதிகபட்ச ஓய்வூதியம்:
மாதம் ரூ.9,250
காலாண்டுக்கு ரூ.27,750
அரையாண்டுக்கு ரூ.55,500
ஆண்டுக்கு ரூ.1,11,000
மாதாந்திர ஓய்வூதியத்திற்காக நீங்கள் குறைந்தபட்சம் ரூ.162,162 மற்றும் அதிகபட்சம் ரூ.15,00,000 முதலீடு செய்யலாம். ஆண்டு ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ.156,658 மற்றும் அதிகபட்சம் ரூ.14,49,086 முதலீடு செய்யலாம். அரையாண்டு ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ 159,574 மற்றும் அதிகபட்சம் ரூ 14,76,064 முதலீடு செய்ய வேண்டும். காலாண்டு ஓய்வூதியத்திற்கு, நீங்கள் குறைந்தபட்சம் ரூ.161,074 மற்றும் அதிகபட்சம் ரூ.14,89,933 முதலீடு செய்யலாம்.