விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் தைரியமும் உண்டாகும் நாள்!!

0
200

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் தைரியமும் உண்டாகும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் தைரியமும் உண்டாகும் நாள். காலையில் சந்தோஷம் உண்டாவதால் மாலையில் தைரியம் நிலவும். நிதி அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச்சிறப்பு. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அதி அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை புகுத்தி வெற்றியடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு சந்தோஷமான நாள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleநரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு!
Next articleநெஞ்சு சளி இரண்டு நாளில் குணமாக வேண்டுமா? ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here