மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது.இருப்பினும் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் வதந்திகள் பரவி வருகின்றது.அதனால் பத்து ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள்,வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது வரையிலும் ஒரு சில பகுதிகளில் கடைகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பத்து ரூபாய் நாணயங்கள் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில் பத்து ரூபாய் நாணயங்களை பற்றி முறையான விழிப்புணர்வு இருந்தும் மக்களிடையே நம்பகத்தன்மை குறைவாக உள்ளது.குறிப்பாக பேருந்து நடத்துனர்,கடைக்காரர்கள் மற்றும் சில வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
நடத்துனர்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.இதற்கான அறிக்கைகளை பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் என வங்கிகள் மற்றும் பொது இடங்களில் விளம்பரம் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இதன் மூலம் பத்து ரூபாய் நாணயம் மீதுள்ள வதந்திக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.