தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.
மேலும் நீட் போன்ற போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க இருந்த நீட் தேர்வானது மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் மருத்துவப் பயிற்சியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்லும் பொழுது அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டிருந்தது.
மேலும் முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பு கால ஊக்கத் தொகை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்து வருகின்றது.அதற்கான விளக்கம் அளித்த தேசிய மருத்துவ ஆணையம் முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பில் செல்வதற்கான நெறிமுறைகள் மாநில அரசை விதிகளில் உள்ளடங்கும்.
அதில் அவர்கள் பணியில் இருக்கும் சமயத்தில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.ஆனால் மகப்பேறு விடுப்பில் செல்லும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.