சேரை எடுத்து வர இவ்வளவு நேரமா? கடுப்பில் நிர்வாகியை கல்லெறிந்து தாக்கிய திமுக அமைச்சர்!!
நாளை திருவள்ளுவர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இவர் வருவதால் அந்த பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி முதல்வர் கலந்து கொள்ள இருப்பதால் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதையொட்டி இதனை கண்காணிக்க பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அங்கு சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றவர் தான் அமர்வதற்காக அங்கிருந்த தனது நிர்வாகிகளிடம் நாற்காலியை எடுத்து வரக் கூறியுள்ளார். அமைச்சர் கூறியதும் அவரது நிர்வாகி, நாற்காலியை எடுத்து வந்தார். ஆனால் அந்த நிர்வாகி மெதுவாகவும் மேலும் இவர் மட்டும் உட்காருவதற்கு ஓர் இருக்கை மட்டும் எடுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் கீழே கடந்த கல்லைக் கொண்டு அவரை நோக்கி எறிய ஆரம்பித்துள்ளார்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அமைச்சர் இவ்வாறு தனது நிர்வாகிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வது கட்சியினிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது திமுக, உட் கட்சி நிர்வாகிகள் மூலம் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் வேளையில் தற்பொழுது அடுத்த பிரச்சனை தயாராக உள்ளது. இவ்வாறு நிர்வாகியை நோக்கி ஆவேசமாக கல்லெறிந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
நாட்டு மக்களை விட அதிக பிரச்சனைகளை தமிழக முதல்வர் தனது நிர்வாகிகளை கொண்டே சத்தித்து வருவது வழக்கமாகவே வைத்துள்ளார்.இதனையும் பலர் இணையத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.