நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது.இதனை தொடர்ந்து இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சில மாணவர்களின் பெற்றோருக்கு நேரா வைரஸ் தொற்று பரவியது தெரியவந்தது.
இந்நிலையில் மாணவர்களுக்கு அந்த தொற்று வைரஸ் பரவியுள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் நோய் அறிகுறிகளுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.அந்த பரிசோதனையில் இரண்டு மாணவர்களுக்கு நேரா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களையும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அதனால் சமந்தப்பட்ட பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரா வைரஸ் தொற்று அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு போன்றவைகளில் இருந்து தான் பரவும் என்பதால் மக்கள் வெது வெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவியப் பிறகே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றானர்.