மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சங்கடமான சூழ்நிலை உண்டாகும் நாள்!!

Photo of author

By Selvarani

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சங்கடமான சூழ்நிலை உண்டாகும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் சற்று சங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வதால் கருத்து வேறுபாடுகள் இன்றி குடும்பம் சுபிட்சமாக நடைபெறும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவார்கள்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உள்ளவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் கவனமாக நடந்து கொண்டால் அவர்களுக்கு நன்மையே.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். இல்லத்தரசிகளுக்கு உடலில் ஒரு விதை இன்னல் வந்து மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.