கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

0
199

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து குவியும் நாள். கணவன் மனைவியிடையே அதை அற்புதமான அந்நூனியம் நிலவுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளுக்காக வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி பல வழிகளில் வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு பதிவு உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கண்டிப்பாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் வந்து சேரும் அதனால் தொழிலை விருத்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் நல்ல விதமாக நடைபெறும். இல்லத்தரசிகளுக்கு கணவனின் அன்பு வியக்க வைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!
Next articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சங்கடமான சூழ்நிலை உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here