பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களே ! இதோ உங்களுக்கான குடியரசு தின சலுகை !

0
179

பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களே ! இதோ உங்களுக்கான குடியரசு தின சலுகை !

பி எஸ் என் எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடியரசுத் தின சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது.

பி எஸ் என் எல் நிறுவனம் நீண்டகாலமாக 4 ஜி சேவையை பெற மத்திய அரசிடம் இருந்து போராடி வருகிறது. ஆனால் இன்னமும் அது அளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது அந்நிறுவனம். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் தத்தளித்து வருகிறது.

இருப்பினும் தனது வாடிக்கையாளர்களுக்காக பல சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை இழுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறது. நாளை குடியரசுத் தினம் கொண்டாடப்பட உள்ளதால அதை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

வழக்கமாக 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 345 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா, எல்லையில்லா கட்டண அழைப்பு மற்றும் 100 எஸ் எம் எஸ் கள் வழங்கப்படும். ஆனால் இப்போது இதே வசதிகளை கூடுதலாக 71 நாட்களுக்கு அதாவது 436 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இச்சலுகை 26 ஜனவரி 2020 முதல் 15 பிப்ரவரி 2020 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்குக் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

4 ஜி வசதி இல்லாவிட்டால் கூட இது போன்ற சலுகைகளால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பி எஸ் என் எல் க்கும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி மூலமாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் 4 ஜி சேவைக்கான உரிமம் கிடைத்து சிறப்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article‘மாஸ்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்: குஷியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்
Next articleநன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ?