காங்கிரசுடன் கை கோர்த்த மநீம!! கமல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து கட்சி இடையே பரபரப்பான சூழல் நிலவி வரும் பட்சத்தில் எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது அதுதான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கை கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற போகும் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்து ஈவிகேஎஸ்-க்கு வாக்கு சேகரிக்க களத்தில் இறங்குவதாக செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் அவர்கள் ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்ட பொழுதே பலரும் இவர்கள் கூட்டணி வைப்பதாக பேசி வந்த நிலையில் தற்போது அது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த கூட்டணி ஆனது அடுத்த ஆண்டு நடைபெற போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு வழிவகுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இதுகுறித்து அடுத்த ஆண்டு தான் முடிவு எடுக்கப்படும் என திட்டவட்டமாக கமல்ஹாசன் தெரிவித்தார். கொள்கைகள் வேறாக இருக்கலாம் ஆனால் தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும்கூறினார்.
அதுமட்டுமின்றி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் வெற்றிக்காக நான் மற்றும் தனது கட்சி நிர்வாகிகள் அயராது உழைக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். மேற்கொண்டு தற்பொழுது இடைத்தேர்தலில் கூட்டணி வைத்துள்ள கமல்ஹாசன் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வார் என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றது.