மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

0
187

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். சந்திர பகவான் ஜென்ம ராசியில் இருப்பதால் சில நேரங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவார் என்பதால் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும் அமைதியாக செல்ல வேண்டும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரும்.

அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவது சில இன்னல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிதிநிலை உயரும் நாள்!!
Next articleஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here