கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிதிநிலை உயரும் நாள்!!

0
195

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிதிநிலை உயரும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நிதிநிலை உயரும் நாள். தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக தடை இன்றி வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஆதி அற்புதமான அன்யூனியம் உண்டாகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதன பிரச்சாரங்களின் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வதோடு மட்டுமல்லாமல் கணவன் வீட்டாரின் அன்பையும் பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மகிழ்ச்சியான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தை தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பொருளாதார நிலை உயரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!
Next articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here