சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக கட்சியின் மூத்த நிர்வாகி நபா தாஸ் என்பவர் உள்ளார்.
இன்று ஒடிசா மாநிலத்தில் ஜார் சுகுடா என்ற மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற பொழுது அதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் நபா தாஸ் கலந்து கொண்டார். அவ்வாறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொள்ள இருப்பதால் அந்த நிகழ்ச்சி போலீசாரால் பலத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கியின் குண்டானது சுகாதாரத்துறை அமைச்சர் நெஞ்சில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
துப்பாக்கி சூடு நடந்ததும் அப்பகுதி மக்கள் அனைவரும் அலறிய நிலையில் அச்சத்தோடு காணப்பட்டனர். மேற்கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் நவா தாஸ் அவர்களை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்பொழுது வரையும் மருத்துவர்கள் இவர் உடல் நலம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் எவ்வாறு இவ்வாறான அசம்பாவிதம் நடைபெற்றிருக்கும் என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்கொண்டு அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என தொடங்கி அங்கு வந்த புகைப்பட நிருபர்கள் என அனைவரையும் போலீசார் சோதனை செய்தும் விசாரணை செய்தும் வருகின்றனர். பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே இவ்வாறு கட்சியின் அமைச்சரை சுட்டது தற்பொழுது அம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.