இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறினர். குறிப்பாக இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லைஎன்றும் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்
இந்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் தனக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை பார்வேர்ட் செய்துள்ளார். அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது இதுதான்
”சைக்கோ படத்தில் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கப்படுகிறது. அந்த படம் சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்டது என்பதால் சிசிடிவி கேமரா எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில்
முதலில் அவர்களை சிசிடிவி கேமராவை காட்டச் சொல்லுங்கள் அப்புறமாக நாங்க காட்டுவோம்’ இவ்வாறு அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது