இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி தான் விடுமுறைகள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இந்த பொது தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.இந்நிலையில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை பொது தேர்வு குறித்து தேர்வுத்துறை ஆலோசானை நடத்த முடிவு செய்துள்ளது.
இன்று கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு நடத்தப்பட இருக்கும் தேதிகள்,கேள்வி தாள்களை பள்ளிக்கு அனுப்புதல் உள்ளிட்ட செயல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.