10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை!

0
177
Worry not 10 rupee coin holders! It must be obtained in all buses otherwise action will be taken!
Worry not 10 rupee coin holders! It must be obtained in all buses otherwise action will be taken!

10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை!

கடந்த 2011 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயம் முதன்முதலில் அமலுக்கு வந்தது ஆனால் தற்போது பத்து ரூபாய் நாணயம் செல்லுமா என அனைவரது மத்தியிலும் குழப்பங்கள் நிலவி வருகின்றது.இந்த பத்து ரூபாய் நாணயம் வெளியப்பட்டு பல ஆண்டுகள் ஆனா நிலையிலும் இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதும் இல்லை.

மேலும் இது குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றது ஆனாலும் அரசு அலுவலகங்களிலோ அல்லது அரசு பேருந்துகளிலோ இதனை வாங்க மறுக்கின்றனர்.இந்நிலையில் அடிக்கடி ரிசர்வ் வங்கியும் பத்து ரூபாய் நாணயங்களை செல்லும் என அறிவிப்பை வெளியிட்டு தான் வருகின்றது.அதனை தொடர்ந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவில்லை என்றால் அது குறித்து புகார் அளிக்க அவசர எண்ணையும் வழங்கியது. இருப்பினும் இந்த பத்து ரூபாய் நாணயம் குறித்து புகார்கள் இன்னும் எழுந்து கொண்டுதான் வருகின்றது.

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில்.இனி அனைத்து அரசு பேருந்துகளிலும் பத்து ரூபாய் நாணயங்களை பெற வேண்டும்,பேருந்தில் இது குறித்த விழிப்புணர்வு போஸ்டர்களை மாநில அரசுகள் ஒட்ட வேண்டும்.வங்கி அனைத்திலும் போஸ்டர்களை ஓட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்!
Next articleமுதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!!