பழையது இல்லை இனிமேல் புதிய வாக்காளர் அடையாள அட்டை! தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்!
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இவை புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன.
இதன்படி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 16 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் முதற்கட்டமாக அச்சிடப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்த செயல் முறையானது முதன் முதலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைமுறைப்படுத்தபட இருக்கிறது. இதன்படி பழைய வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படத்தை மாற்றி புதிய அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு வசதி இடம் பெற்றுள்ளது. மேலும் மிகச் சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த வாக்காளர் அடையாள அட்டையானது அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைக்கு வெளியே இடம்பெற்றிருந்த ஹோலோகிராம் இனி அட்டைக்கு உள்ளே இடம்பெற்று இருக்கும். அட்டையின் முன்புறம் வாக்காளர் புகைப்படமும் அவரது நெகட்டிவ் இமேஜ்ம் இடம் பெற்று இருக்கும்.
இனி போலியான அடையாள அட்டைகள் உருவாகாத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டையானது அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.