பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

0
247
Special buses from February 4th! Notice issued by the Transport Corporation!
Special buses from February 4th! Notice issued by the Transport Corporation!

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.அப்போது ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்தது.அதனால் பெரும்பாலான மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்பி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து கார்த்திகை தீபம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை என அனைத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மக்கள் விடுமுறை நாட்களை அவர்வர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட இருந்ததால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து சார்பில் இயக்கப்பட்டது.

பொதுவாகவே தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் கோட்டம் சார்பில் பண்டிகை காலங்களில் மற்றும் ஏதேனும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் தான்.அந்தவகையில் வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கொண்டாடப்படுகிறது.தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களில் இருந்தும் பழனி,திருவாண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அந்த வகையில் சேலம் கோட்டத்தில் இருந்து பழனி ,வடலூர்,திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துக்குள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இந்நிலையில் வரும் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் வருகிற பிப்ரவரி ஐந்தாம் தேதி தைப்பூசம்,பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலை, கபிலர்மலை, காளிப்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.இந்த சிறப்பு பேருந்துகள் நான்காம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

Previous articleதினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!
Next articleசப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!