சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்!
தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில் சொத்து வரி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் அண்மையில் தான் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவின் படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு காரர்கள் தங்களுடைய சொத்து வரி எண்ணுடன் அவரவர்களின் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வணிக நிறுவனங்கள் தங்களின் சொத்து வரிவிதிப்பு எண்ணுடன் பான் எண் மற்றும் ஜிஎஸ்டி எண் குறித்து விவரங்களை இணைக்க வேண்டும்.இதற்கு கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பு தாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலங்களை நேரில் அணுகி அங்குள்ள சிறப்பு மையத்தில் இன்றுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்து சொத்து வரி விதிப்பு எண்ணுடன் குடும்ப அட்டை மற்றும் ஜி.எஸ்.டி மற்றும் பான் விவரங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.