மத்திய பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ 9 லட்சமாக அதிகரிப்பு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!
மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய அரசின் இறுதி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.மேலும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.அதில் குறிப்பாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பொதுமக்கள் மேற்கொள்ளும் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் மொபைல் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பு தற்போது ரூ 9 லடச்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கின் மூலம் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான உச்சவரம்பு ரூ 15 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் உச்ச வரம்பு ரூ 15 லட்சத்திலிருந்து ரூ 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.