Cinema

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

பா ரஞ்சித் அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார். இதில் கடைசியாக அவர் இயக்கிய காலா திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால் அடுத்த படத்துக்காக இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளார்.

காலா ரிலிஸுக்கு முன்பாகவே அவர் இந்தியில் பிர்சா முண்டா என்ற தலித் தலைவரின் வாழ்க்கையப் படமாக எடுக்க ஒப்பந்தமானார். நமா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் தள்ளிப்போனது. இதனால் இப்போது ரஞ்சித் ஒரு தமிழ்ப்படம் இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இது வடசென்னையில் நடைபெற்ற ஒரு உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையை ரஞ்சித்துடன் எழுத்தாளர் தமிழ் பிரபா இணைந்து எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு சல்பேட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இதில் வில்லனாக நடிக்க இயக்குனர் மகிழ்திருமேனி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குத்துச்சண்டையை மையப்படுத்திய கதை என்பதால் இதில் நடிக்கும் அனைவருக்கும் குத்துச்சண்டை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தொடங்க இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment