மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த ரஜினி: ஒரு சூப்பர் தகவல்

Photo of author

By CineDesk

இந்திய பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான போது அதை 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்த்தார்கள் என்ற தகவல் உள்ளது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மோடியை அடுத்து ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார் இது குறித்த படப்பிடிப்பு இன்றும் நாளையும் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் நடைபெறுகிறது

இந்த ஆவணப்படத்தில் தண்ணீர் மற்றும் உணவை அவர்களே தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் கண்டிஷன். இரண்டு நாட்கள் ஒரு மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்பதை உணர்த்துவதுதான் இந்த ஆவணப்படங்களின் நோக்கம்

இந்த ஆவணப்படங்களில் நடிக்க முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். இதில் தகுதி பெற்றால் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும். நேற்று ரஜினிக்கு உடல்தகுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த ஆவணப்படம் இன்னும் ஒரு சில வாரங்களில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது