ஆவின் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் ஆபர்! ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்!

Photo of author

By Parthipan K

ஆவின் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் ஆபர்! ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்!

Parthipan K

Awesome Abar released by Aavin's company! Buy one get one free!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் ஆபர்! ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்!

கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை வழங்கியது.அப்போது அதில் திமுக அரசானது மகளிருக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும்,குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை கொடுத்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.

அதனை தொடர்ந்து மகளிர்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது.ஆனால்  குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் மக்கள் அனைவரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல பொருட்களின் விலை உயர்ந்தது.அதன் அடிப்படையில் பால் விலை 3 ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது.ஆனால் பால் விலை குறைந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து  பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது.குறிப்பாக ஆவின் நிறுவனமானது 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதனால் இம்மாதம் முழுவதுமே ஆவின் மாதமாக கொண்டாப்படும்.அதனால் இந்த மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றது.

மேலும் நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.அந்த வகையில் 250ரூபாய்க்கு மேல் ஐஸ்கீரிம் வாங்கினால் ரூ 10 மதிப்புள்ள ஐஸ்கிரீம், 500 ரூபாய்க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கினால் ரூ 20 மதிப்புள்ள ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்படும்.இந்த சலுகை சென்னையில் உள்ள ஆவின் பாலகங்களில் ஒரு மாதத்திற்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.