மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மதிப்பு மரியாதையும் உயரும் நாள்!!

0
220

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மதிப்பு மரியாதையும் உயரும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். நிதி நிலைமை அற்புதமாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக பயண வாய்ப்புகள் ஏற்படும் அதன் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் ஆற்றலுடன் செயல்படும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர் பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று வருவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here