கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

0
131

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா ஆரம்பம் முதலே வானவேடிக்கைக் காட்டினார். 6 ஆவது ஓவரில் 27 ரன்கள் சேர்த்த அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதன் பின் விக்கெட்கள் விழுந்தாலும் கோலி, மனிஷ் பாண்டே, ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. அதன் பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியுசிலாந்து களமிறங்க மார்ட்டின் குப்தில் 31 ரன்களும் கேன் வில்லியம்சன் அதிரடியாக 95 ரன்களும் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் போட்டி அவர்கள் கையில் இருந்தது. ஆனால் கடைசி ஓவரில் ஷமி இரண்டு விக்கெட்களை எடுத்தது திருப்புமுனையாக அமைந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டிய சூழலில் டெய்லர் அவுட் ஆக போட்டி டை ஆனது.

அதன் பின் சூப்பர் ஓவரில் இந்தியா முதலில் பந்துவீச கேன் வில்லியம்சனும் டெய்லரும் சேர்ந்து 17 ரன்களை பூம்ரா ஓவரில் எடுத்தனர். அதன் பின் இந்தியா சார்பில் ராகுல் மற்றும் ரோஹித் இறங்கினர். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதற்கடுத்த இரு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.