ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

0
302

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில ஒரு பொன் பொருள் ஆடை ஆபரணத்திற்கு உண்டாக்குவதற்கு சில வாய்ப்புகள் உங்களுக்கு கொடுப்பார். குடும்ப உறவு கணவன் மனைவியை ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். உத்தியோகத்தில் விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதை கண்டு மணமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவிகள் கல்வியில் இன்பமான சூழ்நிலைகளை அனுபவிப்பார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு ஞான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!
Next articleவெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here