பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு! 

0
222

பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு! 

ரெப்போ கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன்  வட்டி விகிதம் தான் ரெப்போ. இது இன்று 0.25 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதி குழு கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தியது. அதன் முடிவுகளை சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ ரேட் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடனுக்கான வட்டி 6.50 சதவீதமாக உயர்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக உலகளவில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகள், உலகளவிலான நிதிக்கொள்கைகளுக்கு பெரும் சோதனையாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை வேதப்படுத்துதல் ஆகிய இரண்டு அம்சங்களுக்கு இடையே வளரும் சந்தையை கொண்ட பொருளாதாரம் நாடுகள் கடும் சிரமத்தை சந்தித்தன. தற்போதைய உலக பொருளாதார சூழல் முன்பை விட மோசமாக தெரியவில்லை. பொருளாதார நாடுகள் வளர்ச்சி வாய்ப்பில் மேம்பட்டு உள்ளன. ஆனால் பணம் வீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது.

2023 – 24 ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6% இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 2023-24ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 %ஆக இருக்கும். இதன்படி முதல் காலாண்டில் 7.8%ஆகவும், 2-வது காலாண்டில் 6.2%ஆகவும், 3வது காலாண்டில் 6%ஆகவும், 4வது காலாண்டில் 5.8%ஆகவும் இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

இதையடுத்து நாட்டின் பணவீக்கம் கடந்த 10 மாதங்களாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6%ஐ விட  அதிகரித்தது. இதனால் கடந்த மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.

2022 மே மாதத்தில் வட்டி விகிதம் 4 சதவீதமாக இருந்த நிலையில் ஓர் ஆண்டில் 2.5 சதவீதம் அதிகரித்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி 35 புள்ளிகள் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Previous articleஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்!
Next articleபல முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டெல்! ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் அவதி!