ஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்!
ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜே இ இ முதல்நிலைத் தேர்வு பிரதான தேர்வு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான ஜே இ இ முதல் நிலை தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட முதல் நிலைத் தேர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற்றது.
மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் என் டி ஏ வெளியிட்டது. அந்த ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். அடுத்தடுத்து வரும் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் புகைப்படங்கள் தெளிவாக இல்லாதவர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் வெளியிடப்படாமல் இருந்தது.
ஜே இ இ தேர்வுகள் நடப்பாண்டிற்கான தேர்வு முடிகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 20 பேர் நூறு மதிப்பெண் எடுத்த தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்களில் 50 பேரின் மதிப்பெண்கள் பரிசீலனில் இருப்பதால் அவர்கள் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜே இ இ இரண்டாவது கட்டத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.