அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்! இனி ரேஷன் கடைகளில் ரூ 3 கொடுத்தால் இந்த பொருளை பெற்றுக் கொள்ளலாம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடையின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது.
அந்த மாற்றத்தின் அடிப்படையில் இனி சில மாவட்டங்களில் ஏழைகளுக்கு முழு கோதுமைக்கு பதில் கோதுமை மாவு வழங்கப்படும். ஆனால் ஒரு கிலோவிற்கு இத்தனை ரூபாய் எனவும் வழங்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கர்னால், அம்பாலா, ஜமுனாநகர், ரோஹ்தக், ஹிசார் போன்ற மாவட்டங்களில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஐந்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமைக்கு பதில் இனிவரும் மாதங்களில் கோதுமை மாவு வழங்கப்படும். ஜனவரி மாதத்தில் இந்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேருக்கு மாவு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஹரியானா அரசு ஏழைகளுக்கு கிலோ மூன்று ரூபாய்க்கு மாவு விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.